Times of Puducherry

உருளையன்பேட்டை தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு – நேரு , குலோத்துங்கன் நேரில் ஆய்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 1:40 PM
collector-mla-inspected-rain-affected-area-orlayenpet

புதுச்சேரியில் கடந்த 16. ம் தேதி அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாறு மற்றும் மழைநீரால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேயம் மக்கள் கழகத் தலைவரும் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான நேரு மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், உப்பனாற்றின் நீரோட்டம், அதன் கட்டுமான பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

உருளையன்பேட்டை தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு – நேரு , குலோத்துங்கன் நேரில் ஆய்வு

மழைநீர் தேங்காமல் இருக்கவும், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top