Times of Puducherry

சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 11:27 PM
cm-laid-foundation-stone-for-TWAD

முதலமைச்சர் விஜய் சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக 3,108.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்விற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழ்நாட்டில் பருவ மழை குறைந்துள்ளதால் சென்னையில் அணைகளில் உள்ள நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ.3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டினார். மேலும், இதற்கான மாதிரியையும் பார்வையிட்டார்.

சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்

இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீா் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தால் மாற்று பகுதியில் இருந்து அந்த தேவையான பகுதிக்கு நீரை அனுப்புவதற்கு உண்டான திட்டமாக பிரதான சுற்றுக் குழாய் திட்டம் சென்னை குடிநீர் வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.

நாளொன்றுக்கு 1762 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கையாளும் வகையில் சுற்றுக்குழாய் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. தற்போது, சென்னை குடிநீர் வாரியம் மூலம் சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீா் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட​ பிரதான குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.  இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது.

எனவே, தற்போதுள்ள குடிநீா் கட்டமைப்பில் உள்ள குறைகளை களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.3,108.55 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top