Times of Puducherry

சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சி ஐ டி யு கிளை சங்கப் பெயர் பலகை திறப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
11 Oct 2026 • 1:40 PM
citu-name-board-inauguration

புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் சி ஐ டி யு, சண்டே மார்க்கெட் வியாபாரிகள் கிளை சங்கப் பெயர் பலகை காந்தி வீதி பகுதியில் இன்று திறக்கப்பட்டது.

சங்க பெயர் பலகையினை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் திறந்து வைக்க சிஐடியு செங்கொடியினை சாலையோர சங்க பொதுச் செயலாளர் வடிவேல் ஏற்றி வைத்தார் .

சி ஐ டி யு மாநில துணைத்தலைவர் தோழர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். சாலையோர சங்க மாநிலத் தலைவர் தோழர் அழகர்ராஜ்,பொருளாளர் வீரா, சண்டே மார்க்கெட் கிளை தலைவர் தோழர் அன்பழகன், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாஸ்கர் நல்லான் கிளினிக் ஆட்டோ கிளை நிர்வாகி தோழர் ஸ்டாலின் சண்டே மார்க்கெட் கிளை நிர்வாகிகள் ரவி, முருகானந்தம், கார்த்திகேயன், மரிய பிரகாசம், பார்வதி, கதிர்வேல், அஸ்வினி பெத்தி செமினார் கிளை நிர்வாகிகள் தோழர் விஜயா, தியாகு உள்ளிட்டோருடன் கிளை உறுப்பினர்கள் திரளாக பங்கு பெற்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top