Times of Puducherry
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த், MLA அவர்கள் தலைமையில், தியாகராய நகர் தொகுதி மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தொகுதி முழுவதும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் திட்டத்தின் தொடக்க விழா தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தியாகராய நகர் தொகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கவும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 1,000-க்கும் மேற்பட்ட CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகர் தொகுதியில் 146 இடங்களில் 350 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன, செயற்கை நுண்ணறிவு (AI Analytics) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு வசதி, முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Face Identification), வாகனங்களைக் கண்காணிக்கும் வசதி (Vehicle Tracking), மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கும் வசதி (Crowd Monitoring), அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையப்படுத்தப்பட்ட பதிவு மற்றும் கண்காணிப்பு வசதி (Centralised Recording and Monitoring).
இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்டறியவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான கண்காணிப்பை மேம்படுத்தவும், அவசர காலங்களில் காவல்துறையின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உதவும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தியாகராய நகர் தொகுதியை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், தொழில்நுட்பத்தின் துணையுடன் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் CCTV கேமராக்கள் நிறுவும் பணியினை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இணை ஆணையாளர் சென்னை தெற்கு திரு.Dr. விஜயகுமார் IPS அவர்கள், துணை ஆணையாளர் தி நகர் காவல் மாவட்டம் திரு. குமார் TPS அவர்கள், உதவி ஆணையர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.