Times of Puducherry
பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வின் போது பண்ருட்டி திருவதிகை, பாலூர் ரோட்டில் வாலாஜா வாய்க்காலில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர்களை ரூ 14 கோடி செலவில் சுத்திகரிப்பு செய்வதற்கான திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து நேதாஜி நகரில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ரூ 4.77 கோடி செலவில் நடைபெற்று வரும் விரிவாக்க திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி கும்பகோணம் சாலையில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை ருசி பார்த்து ஆய்வு செய்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.