Times of Puducherry

ஜிப்மரில் உடல் தானம் செய்த குடும்பத்தினரை அழைத்து கௌரவிக்கப்பட்டனர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 1:40 AM
body-donation-day-celebrated-jipmer-body-donor-family-felicitated

ஜிப்மரில் உலக உடற்கூறியல் தினத்தை ஒட்டி உடல் தானம் செய்த அவர்களின்  குடும்பத்தினரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கௌரிவிக்கப்பட்டனர்.

மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் ஜிப்மர் உடற்கூறியல் துறை, செயல்பட்டு வருகிறது. ஜிப்மர் சமூக தொடர்பு மையம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, உலக உடற்கூறியல் தினம் – ஒரு வார காலம் கொண்டாடப்பட்டது . நவீன உடற்கூறியலின் தந்தை எனப் போற்றப்படும் ஆண்ட்ரியாஸ் வெசாலியஸின் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜிப்மரில் உடல் தானம் செய்த குடும்பத்தினரை அழைத்து கௌரவிக்கப்பட்டனர்

அவரது முன்னோடித்துவம் மிக்க உடற்கூறியல் ஆய்வுகளும் விரிவான உடற்கூறியல் விளக்கப்படங்களும் மனித உடற்கூறியல் கல்வியின்
வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின. தன்னார்வ முழு உடல் தானத்தை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை இந்நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கங்களாக பேசப்பட்டது.

இதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் முதலாம் ஆண்டு MBBS மாணவர்களுக்கான தொடர்கல்வி மருத்துவக் கருத்தரங்கு (CME) ஆகியவை நடத்தப்பட்டன.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜிப்மர் கல்விப் புல தலைவர் டாக்டர் விக்ரம் காடே, மனித உடலின் சிக்கலான அமைப்பையும் இயற்கையாகக் காணப்படும் உடற்கூறியல் வேறுபாடுகளையும் பாடநூல்கள், உடற்கூறியல் மாதிரிகள் மற்றும் மின்னணு உருவகப்படுத்துதல் முறைகள் மட்டுமே முழுமையாக எடுத்துரைக்க முடியாது என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து முன்னேறினாலும், தன்னார்வ உடல் தானத்தை ஊக்குவித்தல், உடல் தானம் செய்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்தல் மற்றும் நேரடி உடற்கூறியல் பயிற்சியைத் தொடர்ந்து வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ஜிப்மர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாசிரியர் டாக்டர் சிட்டோரியா, உடற்கூறியல் அறிவையும் மருத்துவத் திறனையும் வளர்ப்பதில் நேரடி அவதானிப்பும் செய்முறை அனுபவமும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டார். மருத்துவக் கல்விக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், தன்னார்வ உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் முக்கியப்பங்காற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாராட்டப்பட்டன. தொடர்கல்வி மருத்துவக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற டாக்டர் பார்த்தசாரதி மற்றும் திரு. சுதர்ஷன் நாகோன்கர் ஆகியோர் மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினர்.

செயற்கை நுண்ணறிவு ஒரு துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அது பாடநூல் கற்றல், வகுப்பறைக்கற்பித்தல், சுயகற்றல், விமர்சனச் சிந்தனை மற்றும் மனிதத் தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றுக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். வாரம் முழுவதும் நடைபெற்ற மாணவர் நிகழ்ச்சிகள், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு, நெறிமுறை சார்ந்த கற்றல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவித்தன.

தன்னார்வ முழு உடல் தானத்தை ஊக்குவிப்பதிலும், மருத்துவக்கல்வியில் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதிலும் ஜிப்மரின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின. மனித உடலே உடற்கூறியல் கல்வியின் அடித்தளம் என்பதையும், ஒவ்வொரு உடல் தானமும் மருத்துவக் கல்விக்கும் எதிர்கால சுகாதாரப் பராமரிப்பிற்கும் அழியாத பங்களிப்பாகத் திகழ்கிறது என்பதையும் இந்நிகழ்ச்சிகள் எடுத்துரைத்தன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top