Times of Puducherry

பிரதமர் மோடி தமிழகம் வருகை:இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
11 Oct 2026 • 5:54 PM
black-flag-for-modi-trichy-dyfi

பிரதமர் மோடி தமிழகம் வருகையை எதிர்த்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு;

எஸ்.ஜ.ஆர் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில், சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை:இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில், நாடு முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஒருதலைபட்சமாகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, இளைஞர்களை ஏமாற்றிய பிரதமர் மோடியின் சென்னை வருகையைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தமிழகம் வருகை:இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

இப்போராட்டத்தின்போது, 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்குக் காரணமான இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதன் பின்னர், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே கருப்பு கொடி ஏந்தி மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பலர் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்ததை தொடர்ந்து அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக திருச்சி தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பால்பண்ணை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top