Times of Puducherry
தேசிய அளவிலான பால் பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி பெற்ற ஏனாம் வீரர்களுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாராட்டி வாழ்த்து கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அக்டோபர் 3 முதல் 7-ஆம் தேதி வரை இந்திய பால் பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 45-வது சப்-ஜூனியர் தேசிய அளவிலான பால் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும் புதுச்சேரி அணி பெற்றுச் சாதனை படைத்தனர். மேலும், பால் பேட்மிண்டன் கூட்டமைப்பு வழங்கும் மதிப்புமிக்க ‘ஸ்டார் ஆஃப் இந்தியா’ விருதை ஏனாம் வீரர் ஆகுலா கஸ்தூரி சிவ பிரசாத் பெற்றார்.
தேசிய அளவில் சிறப்பாக விளையாடிய ஏனாம் பகுதிக்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களைப் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.