Times of Puducherry

செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 11:04 AM
ayudha-pooja-celebrated-in-pro

புதுச்சேரி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு பூஜைகள் செய்து ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகம் மற்றும் அரசு வாகனங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன சிறப்பு ஆயுத பூஜை செய்தனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, துறை அலுவலக வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அரசின் விருந்தினர் வரவேற்பு மற்றும் மரபுநெறிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து அரசு வாகனங்களும் (Protocol Vehicles) சுத்தம் செய்யப்பட்டன.

செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன், இளநிலைக் கணக்கு அதிகாரி கிருபாகரன், கண்காணிப்பாளர்கள் பாலமுருகன் மற்றும் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் இத்தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது. நிறைவாக, அலுவலகம் மற்றும் அரசு வாகனங்களுக்குக் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top