Times of Puducherry
புதுச்சேரி பாரதி பூங்காவில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தையை மீட்ட பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் சுற்றுலா தளமான ஊசுட்டு ஏரியில், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சில அரிய வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் ஓய்வெடுக்கவும், வருவது வழக்கமாக உள்ளது,
அப்படி வரும் சில பறவைகள் திசை மாறி புதுச்சேரியில் தங்கி விடுவதும் உண்டு அந்த வகையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள பாரதி பூங்காவில் ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தை திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனை பூங்காவிற்க்கு வந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள சட்டப்பேரவை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் சட்டப்பேரவை வந்த வனத்துறை ஊழியர்கள் ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தையை மீட்டு சென்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.