Times of Puducherry
இந்தியா‘ஏ’– ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 275 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. யான்ஷ்ஷெட்கே 66 ரன்களும்,பிரியான்ஷ் ஆர்யாரன் 49ரன்களும், விப்ராஜ் நிகம் 40 ரன்களும் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் 226 ரன்களுக்கு அடங்கியது. இதனால் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக ஜோஷ் பிலிப் 56 ரன்கள்எடுத்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத்சிங் 3 விக்கெட்டும், யாஷ் தாக்குர், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய ‘ஏ’ அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.