Times of Puducherry

அசோக் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 12:32 PM
ashok-anand took oath as a member of legislative assembly

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார் அவருக்கு சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் மங்களம் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். அதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு சட்டப்பேரவை சபாநாயகர் அறையில் நடைபெற்றது.

இதில் சபாநாயகர் அன்பழகன் அசோக் ஆனந்துக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு முதலமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்தும் பூங்கொத்துக்கள் கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்ட அமைச்சர் அசோக் ஆனந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top