Times of Puducherry
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பில் புகை, மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி அருகில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாரத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து துவங்கி வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சம்சுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பிலால், அமானுல்லா, கனி, சர்புதீன், அன்சர், யாசிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.