Times of Puducherry

அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் சிவக்கொழுதை சந்தித்து ஆலோசனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 3:44 PM
anganvadi-union-and-govt-workers-met-pwd-mins-submitted-grievances-petition

அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலர், இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள், பதவி உயர்வு, போனஸ் வழங்குதல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் சிவக்கொழுதை சந்தித்து ஆலோசனை

சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளையும், அங்கன்வாடி பணியாளர்களின் குறைகளையும் கவனமாகக் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு உரிய கவனம் செலுத்தும் எனத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு, அங்கன்வாடி பணியாளர்களின் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைச்செயலர், இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அங்கன்வாடி பணியாளர்களின் நலனையும், அவர்களின் பணிச்சூழலையும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top