Times of Puducherry

அசோக் ஆனந்த வெற்றி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய நல்லாட்சிக்கு மக்கள் அளித்த ‌ அங்கீகாரமாகும் - அன்பழகன் 

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
11 Oct 2026 • 7:12 PM
anbalagan-proud-for-ashok anand-victory-and validates-cm's-governance

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று உப்பளம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் என் ஆர் காங்கிரஸ்‌ வேட்பாளர் தம்பி அசோக்ஆனந்த் அவர்களுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்த தட்டாஞ்சாவடி தொகுதியின் வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றிகலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியானது புதுச்சேரியில் நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய நல்லாட்சிக்கு மக்கள் அளித்த ‌ அங்கீகாரமாகும். தட்டாஞ்சாவடி தொகுதி என்பது முதலமைச்சர் என் ஆர் ஐயா அவருடைய செல்லத் தொகுதி என்பது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களித்தால் மக்கள் நலன் பெறுவார்கள், யாருக்கு வாக்களித்தால் தொகுதியின் வளர்ச்சி மேம்படுத்தப்படும், யாருக்கு வாக்களித்தால் அந்த வேட்பாளர் நம்மோடு துணை நிற்பார், யாருக்கு வாக்களித்தால் படித்த இளைஞர்களுக்குவேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பார் என்று நன்கு சிந்தித்து ஆளும் கட்சியின் உடைய வேட்பாளர் தம்பி அசோக் ஆனந்துக்கு அறிவுசார்ந்து தட்டாஞ்சாவடி மக்கள் வாக்களித்துள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

எதிர்க்கட்சிகளில் மலிவு பொய்யான குற்றச்சாட்டுகளை செவிமடுக்காமல் அவர்களுக்கு இந்த தேர்தலின் மூலம் அமைதியாக ‌ இருந்து தங்களது வாக்களிப்பின் மூலம் நல்ல தீர்ப்பினை வழங்கிய தட்டாஞ்சாவடி மக்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்.

தேர்தல் விருப்பு வெறுப்பு இன்றி‌ அமைதியாக நடத்திய புதுச்சேரி தேர்தல் துறைக்கும், காவல்துறையினருக்கும்‌ அசோக் ஆனந்த் வெற்றிக்கு பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கும் அதிமுக சார்பில் நன்றி.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top