Times of Puducherry

அன்பழகன் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 8:57 PM
anbalagan-b'day-wishes-from-cm-and-others

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், தற்காலிக சட்டப்பேரவை தலைவருமான அன்பழகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

தொடர்ந்து மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமையில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் நீடூழிவாழ வேண்டி இன்று காலை 8:30 மணிக்கு அளவில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.

அன்பழகன் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுப்பையா சாலையில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் சிறப்பு பூஜையும் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் இல்லத்தில் 3000 க்கும் மேற்ப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

பிறந்தநாள் விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பிஜேபி தலைவர் ராமலிங்கம் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top