Times of Puducherry
திருச்சி மாநகரக் காவல் துறையில் தானியங்கி அதிநவீன லேசர் கேமரா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டுக்காக அதிநவீன தாயனியங்கி லேசர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை மாநகரக் காவல் ஆணையர் ந.காமினி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இந்த கேமரா மூலம் மாநகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள், கைப்பேசியில் பேசிக்கொண்டே பயணிப்பவர்கள், 3 பேர் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறும் வாகனங்களை தானியங்கி தொழில்நுட்ப கேமரா மூலம் படம் பிடித்து வாகன வேகத்தின் அளவு, வாகனத்தின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் எண் ஆகியவற்றை அடையாளம் கண்டு வழக்குப் பதிவு செய்யும் பயிற்சி அண்மையில் போக்குவரத்து காவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனியாங்கி லேசர் கேமரா சிறப்பு மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். இந்த தானியங்கி கேமராவை பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்று போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.