Times of Puducherry
பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் மக்களின் கூட்ட நெறிச்சலை குறைப்பதற்காக கூடுதலாக ஸ்லீப்பர் வகுப்பு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில்:
பூஜை பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்காக, பின்வரும் ரயில் சேவைகளில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர்வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது:
1. ரயில் எண். 16101 தாம்பரம் – கொல்லம் எக்ஸ்பிரஸ் – 16.10.2026 முதல் 20.10.2026 வரை
2. ரயில் எண். 16102 கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் – 17.10.2026 முதல் 21.10.2026 வரை
3. ரயில் எண். 20635 சென்னை எழும்பூர் – கொல்லம்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் – 15.10.2026 முதல் 22.10.2026 வரை
4. ரயில் எண். 20636 கொல்லம் – சென்னை எழும்பூர்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் – 16.10.2026 முதல் 23.10.2026 வரை
5. ரயில் எண். 16103 தாம்பரம் – ராமேஸ்வரம் பாம்பன்
எக்ஸ்பிரஸ் – 15.10.2026 முதல் 19.10.2026 வரை
6. ரயில் எண். 16104 ராமேஸ்வரம் – தாம்பரம் பாம்பன்
எக்ஸ்பிரஸ் – 16.10.2026 முதல் 20.10.2026 வரை
7. ரயில் எண். 16751 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்
எக்ஸ்பிரஸ் 16.10.2026 முதல் 18.10.2026 வரை
8. ரயில் எண். 16752 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்
எக்ஸ்பிரஸ் 19.10.2026 முதல் 21.10.2026 வரை
9. ரயில் எண். 16344 ராமேஸ்வரம் – திருவனந்தபுரம் அமிர்தா
எக்ஸ்பிரஸ் 17.10.2026 முதல் 19.10.2026 வரை
10. ரயில் எண். 16343 திருவனந்தபுரம் – ராமேஸ்வரம்
அமிர்தா எக்ஸ்பிரஸ் 18.10.2026 முதல் 20.10.20 26 வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.