Times of Puducherry
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ முனைவர் A.P.J. அப்துல் கலாம் 95ஆம் பிறந்த நாள் புதுச்சேரி அரசு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள முனைவர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவுச்சலைக்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் K.கைலாஷ்நாதன், மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் V.P.சிவக்கொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன், துறையின் செயலர் மற்றும் இயக்குநர் R. ஸ்மிதா, இ. ஆ. ப ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.