Times of Puducherry

ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்; சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுகுமாரன் சஸ்பெண்ட்; ஐஜி பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு அம்பலம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 6:45 PM
A to z-multi-speciality-hospital-partners-dispute-mediation-police-arrested

ஏ டூ இசட் மருத்துவமனை பங்குதாரர்களுக்கு இடையே எழுந்த பிரச்னையை முடிக்க தஞ்சை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து ரூ.3.25 கோடி ரொக்கமாகவும், 1.75 கோடிக்கு செக் போட்டு கொடுத்ததாகவும் சிபிசிஐடி விசாரணையில் சரவணன் சொல்ல சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தமக்கு லஞ்சம் பெறவில்லை என்றும் தமது மூத்த அதிகாரி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனுக்காகவே பஞ்சாயத்து செய்ததாகவும் வாக்குமூலம் அளித்த தகவல் வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ரீ. இருதரப்பும் பார்டனராக சேர்ந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள டேவிட் & கோ அவென்யூ என்ற இடத்தில் ஏ டூ இசட் என்ற பெயரில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை கடந்த 2022ல் தொடங்கினர்.

ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்; சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுகுமாரன் சஸ்பெண்ட்; ஐஜி பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு அம்பலம்

ஏ டூ இசட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக சரவணன், நிர்வாகத் தலைவராக ஆர்.எம்.பாஸ்கரன், பங்குதாரராக ஜெயஸ்ரீ இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாகவே வரவு செலவு தொடர்பாக பார்ட்னர்ஷிப்பில் பிரச்னை எழுந்துள்ளது. இதில் சரவணன் தரப்பு இராமசாமியை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதைத்தொடர்ந்து, சரவணனுக்கு தெரியாமலேயே விதிக்கு புறம்பாக ஜெயஸ்ரீ, உடற்கல்வி ஆசிரியரான குமார் என்பவருக்கு நிர்வாக பொறுப்பை மாற்றி ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்.

ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்; சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுகுமாரன் சஸ்பெண்ட்; ஐஜி பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு அம்பலம்

இதனைதொடர்ந்து, குமார் மருத்துவமனைக்குள் சென்றபோது பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனையின் மேனேஜர் பாஸ்கர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, குமார் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், சுங்காந்திடல் பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த திருமாறன், ஏ டூ இசட் உரிய விதிகளின்படி செயல்படவில்லை என சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்புகிறார். இதனைத்தொடர்ந்து பாஸ்கரனும், சரவணனும் திருமாறனை போனில் மிரட்டுகின்றனர். இதுதொடர்பான ஆடியோவும் வெளியாகி சர்ச்சையானது.

பின்னர் திருமாறன் அளித்த புகாரில் சரவணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை சட்டப் பிரிவு உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திருமாறனை பின்னணியில் இருந்து இராமசாமி தரப்பு இயக்குகின்றனர் என்பது சரவணனுக்கு தெரிந்தது. இதையடுத்து சரவணன் மற்றும் இராமசாமி இருதரப்பும் தனி தனியாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்கின்றனர்.

இந்நிலையில் பாஸ்கரன் கைது செய்யப்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் ஜாமீன் பெற்றார். இந்த சூழலில் ஐஜி பாலகிருஷ்ணன் இதனை விசாரணை நடத்தியதாகவும், இருதரப்பும் விருப்பத்தின் பேரில் பேசி முடித்து கொள்ள விரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது சரவணன் தரப்பு, டாக்டர் இராமசாமி தரப்புக்கு ரூ.24 கோடி செட்டில் செய்து விடுவதாக எழுதி கொடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் பேச்சு வார்த்தையின்படி முதல் கட்டமாக ரூ.5 கோடியை இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து சரவணன் தரப்பு கொடுத்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீயும் இருந்துள்ளார்.

இதற்கு முன்பே சரவணனும், அவரது அப்பா ராமனும் ஐஜி பாலகிருஷ்ணன் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை, ஒருதலைப்பட்சமாகவும், இராமசாமி தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறி இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர், முதல்வர் தனிபிரிவு, டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடர்கிறது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி சிபிசிஐடி போலீஸார் இன்ஸ்பெக்டர் சுகுமாறனிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை செய்தனர்.

மேலும், சரவணனிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக சுகுமாறனை கைது செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுகுமாறனிடம் கடந்த 10ம் தேதி தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நேரில் பார்த்து, விசாரணை நடத்தி அக்.23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சுகுமாறனை பணியிடைநீக்கம் செய்து, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கில் தஞ்சை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாரன் அளித்த வாக்குமூலம் காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய காவல்துறை அதிகாரிகள், தனியார் வர்த்தக தகராறுகளில் லஞ்சம் பெற்று பஞ்சாயத்துசெய்யும் தொடர் சம்பவங்கள் தமிழக காவல்துறை வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இரு தனியார் மருத்துவமனை இணைப் பங்குதாரர்களுக்கு இடையே நிலவி வந்த தொழில் தகராறில், ஆய்வாளர் சுகுமாரன் சட்டவிரோதமாகத் தலையிட்டுள்ளார். ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பஞ்சாயத்தை முடித்துத் தருவதற்காக ரூ.5 கோடி லஞ்சமாகக் கேட்டுப் பெற்றுள்ளார். ரகசியப் புகாரின் அடிப்படையில் புலனாய்வு அமைப்புகள் அதிரடித் தலையீடு செய்து அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தன. இது தற்செயலாக நடந்த குற்றச்சம்பவம் அல்ல, அவரது நீண்டகால ஒழுங்கீன நடவடிக்கைகளின் தொடர்ச்சியே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட ஆய்வாளர் சுகுமாரன், நீதிமன்றக் காவலைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாகத் தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை வார்டுக்கு அனுப்பப்படாமல், வெளிப்புற பொது மருத்துவமனையில் சுகபோக சிகிச்சை பெறும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, தான் பெற்ற ரூ.5 கோடி லஞ்சப் பணத்தை தனக்காக வாங்கவில்லை என்றும், மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நேரடி உத்தரவின் பேரிலேயே இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றதாகவும் அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஐ.ஜி.பாலகிருஷ்ணன் மற்றொரு உயர் அதிகாரியான அஸ்ராவின் ஒரே பேட்ச்மேட் என்பதால், காவல்துறைக்குள்ளேயே நேர்மையான உள்விசாரணை நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகுமாரன் கடந்த, 2023ம் ஆண்டு காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது வழக்கு தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் சென்ற கிரிஜா என்ற இளம் பெண்ணுக்கு மொபைல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி, ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கிரிஜா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2023ல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர் தான் இந்த சுகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top