Times of Puducherry

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55–ஆம் ஆண்டு தொடக்க விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 5:07 PM
55th-annual-day-of-admk-celebration-anbalagan

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55–ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் அதிமுக சார்பில் உப்பளம், டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் மாநில கழக செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் கழக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து, அண்ணா படத்திற்கும், கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கும், அம்மா திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55–ஆம் ஆண்டு தொடக்க விழா

கழக நிறுவனர், பாரத ரத்னா, மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு இதே நாளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கி வைத்தார். அவரால் துவக்கி வைக்கப்பட்ட அண்ணா தி.மு. கழகம் தனது 54 ஆண்டுகால அரசியல் சேவையை முழுமையாக நிறைவு செய்து 55இல் அடி எடுத்து வைக்கும் மாபெரும் எங்கள் இயக்கத்திற்கு நெஞ்சார்ந்த வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55–ஆம் ஆண்டு தொடக்க விழா

புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களால் பாதுகாக்கப்பட்டு ஒரு எஃகு கோட்டையாக செயல்படும் ஒரு மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மற்றவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

அரசியல் கட்சிகள் என்றாலே சில நேரங்களில் ஏற்றத்தாழ்வுகள் வர செய்யும் அது போன்ற காலகட்டத்தில் கட்சியினால் பல்வேறு பொறுப்புகளை பெற்றவர்கள் பல்வேறு பதவிகளை அடைந்தவர்கள் பல்வேறு பலன்களை அடைந்தவர்கள் ஒன்று சேர்ந்து இயக்கத்தை சிந்தாமல் சிதறாமல் கட்டிக் காக்க வேண்டும். அது ஒவ்வொரு கழக தொண்டர்களின் கடமையாகும்.

புரட்சித் தலைவரின் வழி வந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் ஆகும். எப்பொழுதும் நம்முடைய புரட்சித் தலைவர் அவர்கள் கழகத் தொண்டர்களிடம் பேசும் பொழுது ஒரு தொண்டன் திறமையானவராக‌, வல்லவனாக, நல்லவனாக இருக்கலாம் ஆனால் அந்த தொண்டன் விசுவாசமான தொண்டனாக இருக்க வேண்டும் .அதுதான் என்னுடைய விருப்பம் என்பார்.

இன்றைய காலகட்டத்தில் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கை நமது இயக்கத்திற்கு குறைந்து உள்ளதால் நாம் சில நெருக்கடிகளை சந்திக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் புரட்சித்தலைவரின் பொன் மொழியை புரட்சித்தலைவரின் கட்டளையை புரட்சித்தலைவரின் ஆணையான விசுவாசம் உள்ள உண்மையான கழக தொண்டனாக இருப்போம் என்பதை உணர்ந்து கழகத்தை நாம் அனைவரும் கட்டி பாதுகாக்க முன்வர வேண்டும் . இது ஒன்று நாம் கழகத்திற்கும்,புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் செய்யும் மாபெரும் தொண்டாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top