Times of Puducherry

கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கு ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 8:51 PM
5-days-skill-development-training-for-construction-workers

புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் புதுச்சேரி சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தொழிலாளர் அமைச்சர் . மல்லாடி கிருஷ்ண ராவ் அலுவலக செய்தி குறிப்பில்:

புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் புதுச்சேரி சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கு ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆகையால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் புதுச்சேரி சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பங்கு பெற விரும்புபவர்கள் புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் புதுச்சேரி சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top