Times of Puducherry
நாகையில் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் வாங்கியதாக 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக தவெக நிர்வாகியாக இருந்த பூபாலன் மற்றும் அவரது நண்பர்களான சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல முக்கியப் புள்ளிகளுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்த வழக்கில் மெத் கடத்துவதற்கு கார் வழங்கிய பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் இன்று காலை சம்மன் வழங்கியுள்ளனர்.இந்த நிலையில் வேளாங்கண்ணி டிஎஸ்பி-யின் ஓட்டுநரான காவலர் சிவகுமார், வேளாங்கண்ணி காவல் நிலையப் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மெத் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுகனின் உறவினர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான் வேளாங்கண்ணி டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.