Times of Puducherry

7-வது ஆண்டாக சத சண்டி மஹா ஹோமம் உலக நன்மைக்காக நடைபெற்றது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 11:41 PM
sada-sandi-maha-homam-observed-for-world-wellness

புதுச்சேரி தர்ம சம்ரஷ்க்ண சமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு உலக நன்மைக்காக நடைபெற்ற மகா சத சண்டி யாகத்தில் அம்மனுக்கு அணிவிக்கும் தங்க கம்மல் மூக்குத்தி,வெள்ளி கொலுசு மற்றும் பட்டு புடவை உள்ளிட்ட ஆயிரம் வகையான மூலிகைகளை கொண்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது.

புதுச்சேரி தர்ம சம்ரஷ்ண சமிதி சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு சத சண்டி மஹா ஹோமம் நடைபெற்று வருகிறது. 7-வது ஆண்டாக நடைபெறும் சத சண்டி மஹா ஹோமம் புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்றது.

7-வது ஆண்டாக சத சண்டி மஹா ஹோமம் உலக நன்மைக்காக நடைபெற்றது

சத சண்டி மஹா ஹோமத்தில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, கன்ய,வடுக, தம்பதி, சுபாஷினி பூஜைகள் நடைபெற்று,மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.

தொடர்ந்து சண்டி மகாயாகத்தில் வைக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சத சண்டி மகா யாகத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் பட்டுப் புடவை, தங்க மூக்குத்தி, கம்மல், வெள்ளி கொலுசு உள்ளிட்ட ஆயிரம் வகையான மூலிகைகளை அக்னி குண்டத்தில் போட்டு மகா சண்டியாகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற சூரசம்கார விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் குருக்கள் கூறும்போது மகா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு தியானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன் தொல்லையை நீங்கும், எதிரிகள் விலகி குடும்பம் நன்மையாக இருக்கும் என்பது ஐதீகம் என்று குறிப்பிட்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top