Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால்களை ஆய்வு செய்த MLA அசோக் ஆனந்த்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 4:37 PM
ashok-anand-inspected-drain-clogging-areas-to-resolve

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி நகர், தொட்டுப்பாளையம், புதுப்பேட்டை , அகத்தியர் வீதி, முத்துலிங்கபேட்டை, ஏர்போர்ட் சாலை,உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வாய்க்கால்களில் மழைநீர் சீராகச் செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த், தனது இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாய்க்கால்களில் மரங்களின் வேர்கள் வளர்ந்து மழைநீர் செல்வதற்குத் தடையாக இருப்பதையும், சில இடங்களில் வாய்க்கால்களின் தடுப்புச் சுவர்கள் இடிந்து சேதமடைந்திருப்பதையும் கண்டறிந்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால்களை ஆய்வு செய்த MLA அசோக் ஆனந்த்

இதையடுத்து, மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றவும், சேதமடைந்த தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார்.

மேலும், மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதைத் தடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top