Times of Puducherry

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - cpi(m) மாதவன் கடிதம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 11:57 PM
cpi(m)-madavan-mentioned-to-finish-thirupathirippuriyur-railway-work

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் ‘அம்ருத்’ (Amrut) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மேலும், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கடலூர் சந்திப்பு (Cuddalore Junction) ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - cpi(m) மாதவன் கடிதம்

விழுப்புரம் – தாம்பரம் (66055/66056) மற்றும் மயிலாடுதுறை – கோயம்புத்தூர் ஜனசதாப்தி (12083/12084) ஆகிய ரயில்களை, கடலூர் துறைமுக சந்திப்பு (Cuddalore Port Junction) வரை நீட்டிக்க வேண்டும்.

கடலூர் சந்திப்பிலிருந்து திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

அதேபோல், கடலூர் சந்திப்பு – சேலம் இடையிலான ரயில் சேவையை (06121/06122) திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும்.கடலூர் ஒரு முக்கிய தலைமையிடமாக இருப்பதால், புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். காச்சிகுடா – செங்கல்பட்டு (17653/17654) மற்றும் காக்கிநாடா – செங்கல்பட்டு ஆகிய ரயில்களை, பண்ருட்டி, கடலூர் மற்றும் வடலூர் வழியாக விருத்தாச்சலம் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.

கடலூர் – புதுச்சேரி – சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், நிதி பற்றாக்குறை காரணமாக அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

எனவே, இத்திட்டத்தை விரைவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179/16180), காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175/16176), மஹால் எக்ஸ்பிரஸ் (22623/22624), உழவன் எக்ஸ்பிரஸ் (16865/16866), ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16752) மற்றும் பாமினி எக்ஸ்பிரஸ் (17407/17408) ஆகிய இரவு நேர ரயில்கள், கடலூர் சந்திப்பு மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.

கடலூர் சந்திப்பில் பயணிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்க, குடிநீர், நிழற்குடை, கழிப்பறை மற்றும் பிற பொதுத்தேவை சார்ந்த அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும். மேலும், ரயில் போக்குவரத்தைச் சீரமைக்கவும் பயண நேரத்தைச் சேமிக்கவும், கடலூர் சந்திப்பில் நான்காவது நடைமேடையை அமைக்க வேண்டும்.கடலூர் மற்றும் விருத்தாச்சலம் இடையே அமைந்துள்ள குள்ளஞ்சாவடி ரயில் நிலையத்தால் சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வந்தனர்.

தற்போது இந்த ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குள்ளஞ்சாவடி ரயில் நிலையத்தை முன்னுரிமை அடிப்படையில் மீண்டும் திறக்க வேண்டும். கடலூர் சந்திப்புக்கு அருகில் உள்ள சுத்துகுளம், கம்மியம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களையும், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் குப்பன்குளம் மற்றும் போடிசெட்டி தெருவுக்கு இடையே பாதசாரிகளுக்கான மேம்பாலத்தையும் விரைந்து அமைக்க வேண்டும்.

பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தின் பெயரை ‘கடலூர் திருப்பாதிரிப்புலியூர்’ என மாற்ற வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மக்கள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து, 14.11.2026 சனிக்கிழமையன்று திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ‘ரயில் மறியல்’ போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top