Times of Puducherry

விடுதலை நாள் விழா: அமைச்சர்கள் கொடியேற்றி தலைமை தாங்குவார்கள் - சுதாகர் அறிவிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 11:30 PM
liberation-day-flag-hoisting-arrangements-sudagar

நவம்பர் ஒன்னாம் தேதி அன்று நடைபெறவுள்ள விடுதலை நாள் விழாவிற்கு அந்தந்த மண்டலங்களில் தேசியக் கொடியை ஏற்றி, விழாவிற்குத் தலைமை தாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

வருகின்ற ஒன்றாம் தேதி விடுதலை நாள் விழா புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விடுதலை நாள் விழா: அமைச்சர்கள் கொடியேற்றி தலைமை தாங்குவார்கள் - சுதாகர் அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்திற்கு வேளாண் துறை அமைச்சர் ஜி. என். எஸ். ராஜசேகரன், கொடி ஏற்றி அரசு மரியாதை ஏற்றுக் கொள்வார்.

யானம் மண்டலத்தில்: பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், கொடியேற்றி அரசு மரியாதை ஏற்றுக் கொள்வார்.

மாகே மண்டலம்: ஆதிதிராவிட திராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு கொடி ஏற்றி அரசு மரியாதை ஏற்றுக் கொள்வார்.

மண்டலங்களில் நடைபெறவுள்ள தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் விடுதலை நாள் 2026 கொண்டாட்டங்களுக்கு, உரிய நெறிமுறைகள் (Protocol), இந்தியக் கொடி விதிமுறை (Flag Code of India) மற்றும் பிற தொடர்புடைய அறிவுறுத்தல்களின்படி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நிகழ்ச்சித் திட்டம், வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள், வரவேற்பு, போக்குவரத்து, தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் பிற தேவையான ஏற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சரின் தனிச் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விரிவான நிகழ்ச்சித் திட்டத்தை, இந்தத் துறைக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சரின் தனிச் செயலாளருக்கும் முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top