Times of Puducherry

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 11:11 PM
anbumani-ramadoss-condemns-arrest-of-ntk-karthiga

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top