Times of Puducherry

திருச்சி மத்திய சிறையில் 10 கிராம் கஞ்சா பறிமுதல்: 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 5:32 PM
10gm-ganja-recovered-case-registered-on-3-prisoners-trichy-central-jail

திருச்சி மத்திய சிறையில் மாதந்தோறும் போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் சிறைத்துறை போலீசார் திடீரென்று மத்திய சிறை வளாகத்திற்குள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்பொழுது ஆயுள் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ள அறை முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 10 வது பிளாக் பகுதியில் உள்ள அறையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு அந்த அறையில் ஒன்றும் இல்லை, இதையடுத்து அறையில் இருந்த வாலியை சோதனை செய்து பார்த்தனர். அதில் பொட்டலமாக சிலது மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

திருச்சி மத்திய சிறையில் 10 கிராம் கஞ்சா பறிமுதல்: 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து போலீசார் அதனை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அதில் 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரி அங்கு இருந்த கைதிகளிடம் விசாரணை செய்தபோது இரண்டு கைதிகள் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

இது குறித்து கே கே நகர் போலீசில் சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் சேலம் அசுரை சேர்ந்த தேவா (வயது 27) நாமக்கல் சேத்தமங்கலத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 34) ஆகிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று திருச்சி ரெட்டமலை ரோடு ரயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேசுராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா விற்று கொண்டிருந்த ராம்ஜி நகரை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1.4 கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top