Times of Puducherry

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 சிறிய ரக ஆம்புலன்ஸ் வைத்திலிங்கம் அறிவிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 8:30 PM
10-mini-ambulance-primary-health-centre-mp-announcement

புதுச்சேரி காங்கிரஸ் எம்பி நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி 30 லட்சம் மதிப்பில் பத்து ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு ஏற்பாடு, காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்தார். இதுகுறித்து எம்பி அலுவலக செய்தி குறிப்பில்:

கடந்த மாதம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெறும் பல்வேறு திட்டங்களை ஆராய கூடிய DISHA கமிட்டி கூட்டம் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 சிறிய ரக ஆம்புலன்ஸ் வைத்திலிங்கம் அறிவிப்பு

காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளதாகவும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்த கோரிக்கையினை அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத் துறையின் பயன்பாட்டிற்காக தன்னுடைய பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்து அதன் மூலம் 10 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இந்த 10 சிறிய ரக ஆம்புலன்ஸ்களை உடனடியாக கொள்முதல் செய்து தேவைக்கேற்ப அந்தந்த பிராந்தியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். இதற்கான ஆணையும் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு முகமை (DRDA) மூலமாக சுகாதாரத் துறை இயக்குனர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top