Times of Puducherry
புதுச்சேரியில் அனைத்து நியாய விலை கடைகளிலும் White-listing சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் முத்து மீனா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சார்பில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடைய சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கான White-listing சிறப்பு முகாம் 10.10.2026 முதல் 18.10.2026 வரை புதுச்சேரி பிராந்தியத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில், PMGKAY திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளை White-listing செய்வதற்கான சேவை மட்டுமே வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிப் பயனை டிஜிட்டல் கரன்சி (Digital Currency) வடிவில் பெறுவதற்கு, தகுதியுடைய பயனாளிகள் White-listing நடைமுறையை நிறைவு செய்திருப்பது அவசியமாகும்.
எனவே, இதுவரை White-listing செய்யப்படாத தகுதியுடைய சிவப்பு நிறரேஷன் அட்டைதாரர்கள், இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு White-listing செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். White-listing செய்துகொள்ள வரும்போது கட்டாயம் கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்:ரேஷன் அட்டை.ஆதார் அட்டை.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன்.மேற்கண்ட ஆவணங்களுடன், தங்களது ரேஷன் அட்டைக்கு உட்பட்டநியாய விலைக் கடைக்குச் சென்று White-listing நடைமுறையை நிறைவுசெய்துகொள்ளலாம்.
எனவே, PMGKAY திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடைய சிவப்புநிற ரேஷன் அட்டைதாரர்களில் இதுவரை White-listing செய்யாத அனைவரும், இச்சிறப்பு முகாமைத் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு, அரசின் நிதிப்பயனை டிஜிட்டல் கரன்சி வடிவில் பெறுவதற்கான நடைமுறையை நிறைவு செய்யுமாறு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.