Times of Puducherry
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உண்டியல் காணிக்கை இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகஉண்டியல் காணிக்கை கிடைத்துள்ளன.
செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,000 கோடிக்கு மேல் காணிக்கைகிடைத்துள்ளது.
செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126.41 கோடி,ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி,ஜூலை மாதம் ரூ.140.25 கோடி,ஜூன் மாதம் ரூ.124.49 கோடி,மே மாதம் ரூ.113.53 கோடி,ஏப்ரல் மாதம் ரூ.115.97 கோடி,மார்ச் மாதம் ரூ.125.76 கோடி,பிப்ரவரி மாதம் 28 நாட்களுக்கு ரூ.107.36 கோடி,ஜனவரி மாதம் ரூ.124.55 கோடியை பக்தர்கள்காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.