Times of Puducherry

விருதாச்சலம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் -பிரேமலதா விஜயகாந்த்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
9 Oct 2026 • 8:12 PM
virudachalam-people-basic-needs-assurance-premalatha

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விருத்தாசலம் சட்டமன்றத் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யன் செந்தில் குமார் சந்தித்து மனு வழங்கினார்.

கலெக்டரை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

விருதாச்சலம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் -பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று ஆய்வு செய்தேன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து கேட்டறிந்தேன். மக்களுக்கு உரிய பொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்தேன். ஏற்கெனவே, கடந்த 24.07.2026 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மனு படித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன் .

இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடமும் மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி, தேவையான பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி, விருதாச்சலம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் . விருதாச்சலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தத் வேண்டும்.

அதிகம் படித்தவை

  • October 9, 2026 • 9:01 PM

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் White-listing சிறப்பு முகாம் நடைபெறுகிறது – இயக்குனர் முத்து மீனா

  • October 9, 2026 • 8:24 PM

9 மாதங்களில் மொத்தம் ரூ.1,000 கோடிக்கு மேல் காணிக்கை – திருப்பதி தேவஸ்தானம்

  • October 9, 2026 • 8:12 PM

விருதாச்சலம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் -பிரேமலதா விஜயகாந்த்

  • October 9, 2026 • 7:41 PM

தி.மு.க.வின் செல்வாக்கை விஜயால் அசைக்க முடியவில்லை;பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது – ஸ்டாலின் விமர்சனம்

  • October 9, 2026 • 7:08 PM

“வாழ்விடங்களை இணைப்போம், செழிப்பான வனவிலங்குகளை உருவாக்குவோம்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top