Times of Puducherry

ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புதான் காரணம் :அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது குறித்து வேல்முருகன் கண்டனம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 5:15 PM
velmurugan-condemns-rajiv-speech-reg-foam-formation-in-rivers

பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசலாமா? நொய்யல், தென்பெண்ணை நுரைக்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

தென்பெண்ணை,நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புதான் காரணம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயப் பதிவுகளில் தென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அமைச்சர் தற்போது பொதுமக்களின் சோப்பு, ஷாம்புவை மட்டும் காரணமாகக் கூறுவது எந்த ஆய்வின் அடிப்படையில்?

கழிவுநீர் கலப்பது தொடர்பாக தீர்ப்பாயத்தில் பதிவுகள் இருக்கும்போது, அந்தக் கழிவுகளைக் கணக்கில் கொள்ளாமல் சோப்பையும் ஷாம்புவையும் மட்டும் சுட்டிக்காட்டுவது ஏன்?, நொய்யல் ஆற்றின் நுரைக்கு சோப்பு, ஷாம்புதான் முக்கியக் காரணம் என்றால், அமைச்சர் எந்த நீர்மாதிரியை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்தார்?, ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரின் ரசாயனக் கூறுகள் என்ன என்பதை அரசு வெளியிடுமா?

சோப்பு, ஷாம்புவே காரணம் என்றால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு குறித்து அரசு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் என்ன?, நொய்யல் பகுதியில் பல ஆண்டுகளாகப் பேசப்படும் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்கு அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன?, தென்பெண்ணையில் கர்நாடகப் பகுதிகளில் இருந்து கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் வருவதாக NGT பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எங்கே?

ஒருபுறம் கழிவுநீர் தொடர்பான பிரச்சினையை அரசு அமைப்புகளே பதிவு செய்கின்றன. மறுபுறம் பொதுமக்களின் குளியல் சோப்பு ஷாம்பு மட்டும் காரணமாகக் கூறுவது எந்த அறிவியல் அடிப்படையில்?, ஆற்றில் நுரை உருவாகும் காரணத்தைத் தீர்மானிக்கும் முழுமையான நீரியல் மற்றும் ரசாயன ஆய்வு அறிக்கையை அரசு மக்களிடம் வெளியிடத் தயாரா?, மாசுபாட்டின் மூலத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் கடமை. பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டுவது எப்படித் தீர்வாகும்?

தமிழ்நாட்டின் ஆறுகள் மக்களின் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் நேரடியாக இணைந்தவை. எனவே, காரணத்தை அறிவியல் தரவுகளால் நிரூபிக்காமல் எந்த ஒரு தரப்பினர் மீதும் பழியைச் சுமத்தாமல், ஆற்றில் கலக்கும் ஒவ்வொரு கழிவின் மூலத்தையும் அரசு வெளிப்படையாகக் கண்டறிய வேண்டும்.

அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தை, தொடர்புடைய அமைச்சர் திரும்பப் பெறுவதோடு, அதற்கு உரிய வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

அதிகம் படித்தவை

  • October 28, 2026 • 6:29 PM

செங்குறிச்சியில் மதுபானக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

  • October 28, 2026 • 6:15 PM

சென்னையில் ஜனவரி 22-ல் தென்னிந்திய இயற்கை விவசாயிகளின் 2-வது மாநாடு; முதல்வர் பங்கேற்பு – பிஆர் பாண்டியன் தகவல்

  • October 28, 2026 • 6:00 PM

நாட்டு வெடி வெடிக்க வைத்து இன்ஸ்ட்டாகிராமில் வீடியே பதிவிட்ட இளைஞர்கள் கைது

  • October 28, 2026 • 5:49 PM

சுப்பையா நகரில் மின்தடையால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அசோக் ஆனந்த் சொந்த செலவில் மின் இணைப்பு

  • October 28, 2026 • 5:42 PM

பொய்யான செய்திகளை பரப்பி மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் காங்கிரஸ் அவப்பெயரை ஏற்படுத்தவும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் செல்வகணபதி

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top