Times of Puducherry

எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி கோரி சென்னையில் சாலை மறியல்:10 நாள்களுக்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அருண்ராஜ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 4:14 PM
sma-affected-21-children-parents-protested-help-later-met-arunraj

தமிழகத்தில் முதுகெலும்பு தசைநார் சிதைவு (எஸ்எம்ஏ) நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளுக்கு உரிய மருத்துவ உதவியும், சிகிச்சையும் வழங்கக் கோரி, சென்னை பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஆண்டோனி தலைமையில், குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் தலைமைச் செயலகம் செல்லும் வாலாஜா சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும், சிகிச்சைக்கான செலவுகளை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், 10 நாள்களுக்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, குழந்தைகளின் பெற்றோர்கள் பேசுகையில், தங்களது குழந்தைகளின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்படுவதுடன், உரிய மருத்துவச் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு அவசியமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், குழந்தைகளுக்கான மருந்து, மாத்திரைகளுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.15,000 செலவாகும் நிலையில், குறிப்பிட்ட உயர் செலவிலான சிகிச்சைக்கு சுமார் ரூ.16 கோடி வரை தேவைப்படுவதாகவும், இத்தகைய பெரும் தொகையைத் தங்களால் தனியாகச் செலவிட முடியாத நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு தலையிட்டு உரிய மருத்துவ உதவிகளையும் சிகிச்சைக்கான நிதியுதவியையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்ட ஒருங்கிணைப்புப் பணிகளில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்தைச் சேர்ந்த ரெட்டாக்குறிச்சி மணிகண்டன், மா. கொத்தனூர் ஜெயபால் மற்றும் கீழ் ஒரத்தூர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் படித்தவை

  • October 28, 2026 • 5:42 PM

பொய்யான செய்திகளை பரப்பி மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் காங்கிரஸ் அவப்பெயரை ஏற்படுத்தவும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் செல்வகணபதி

  • October 28, 2026 • 5:15 PM

ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புதான் காரணம் :அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது குறித்து வேல்முருகன் கண்டனம்

  • October 28, 2026 • 4:50 PM

டீசல், உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி போக்குவரத்துக் கழகங்கள் அவதி: வெற்றிப்பயண நிதியை உடனே வழங்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

  • October 28, 2026 • 4:14 PM

எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி கோரி சென்னையில் சாலை மறியல்:10 நாள்களுக்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அருண்ராஜ்

  • October 28, 2026 • 3:58 PM

மெத்தபெட்டமின்: தவெகவை கண்டித்து நாகை பிரஸ் கிளப் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top