Times of Puducherry

பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 4:03 PM
tvk-govt-tn-unsafe-condemns-dmk-malalir-wing-protest-on-31st

பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வருகிற 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில்
மாவட்டத் தலைநகரங்களில் 31.10.2026 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் த.வெ.க.வினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வருகிற 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top