Times of Puducherry
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதல்வரின் திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட மழைநீர் தேங்கும் அபாயம் உள்ள பகுதிகள், பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பருவ மழையால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கியிருந்து மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். துார்வாரும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.
திருச்சியில் மழைநீர் தேங்கும் மேலப்புதூர் பகுதிகளில் ஆய்வு செய்து சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க பக்க வாட்டு வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளது. மாநகரில் 10 இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களாகவும், வெள்ள பாதிப்புக்கான இடங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புக்கு என நிரந்தர தீர்வு குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.