Times of Puducherry
தெலங்கானாவில் நடைபெற்ற 18-வது தென்னிந்திய அளவிலான நெட் பால் போட்டியில், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகர் பகுதியைச் சேர்ந்த செழியன் பங்கேற்று, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தென்னிந்திய அளவிலான இப்போட்டியில் சிறப்பாக விளையாடி புதுச்சேரி மாநிலத்திற்கும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் பெருமை சேர்த்த செழியனை, தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் நேரில் சந்தித்துப் பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.