Times of Puducherry
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி 25 மணி நேரம் காத்திருந்து பெருமாள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் – கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று லட்சகணக்கான பக்தர்கள்குவிந்தனர். திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி மலையில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் தேவஸ்தானம் சார்பில் தற்காலிகமாக தார்ப்பாய் அமைக்கப்பட்டது. பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தார்ப்பாய் அகற்றப்பட்டது. தார்பாய் அகற்றப்பட்டதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் வெயிலில் அவதி அடைந்தனர். இதே போல் திருப்பதியில் சர்வ தரிசனடோக்கள் பெறுவதற்காக ஸ்ரீனிவாசன் பூதேவி மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் வரை கோவிலில் மொத்தம் 2.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 91,296 பேர் தரிசனம் செய்தனர். 32,805 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.06கோடிஉண்டியல்காணிக்கை வசூலானது. 4.67 லட்சம் லாட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம்காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.