Times of Puducherry

பயங்கர சாலை விபத்து: ஆம்புலன்ஸ் - கார் நேருக்கு நேர் மோதி கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பரிதாப பலி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
4 Oct 2026 • 9:55 PM
accident-sokkanathapatti-3death

திருமங்கலத்தில் இருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸும், தூத்துக்குடியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமங்கலம் சோழவந்தான் ரோட்டைச் சேர்ந்த சரவண கணேஷ் (த/பெ கார்த்திகேயன்) என்பவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ஜி.கே மருத்துவமனையிலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு ‘எஸ்.ஆர்’ (SR) ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். அவருடன் அவரது நண்பர் பிரதீப் (த/பெ கௌதம்) உடனிருந்துள்ளார். அதே நேரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது குடும்பத்தினர், தங்களது இளைய மகன் ஆதித்யாவை (19) ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் விடுமுறை முடிந்து மீண்டும் விடுதியில் சேர்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரில் ஆதித்யா, அவரது தாய் சொர்ணலட்சுமி மற்றும் மூத்த சகோதரர் மூர்த்தி (21) ஆகியோர் பயணித்தனர்.

அப்பொழுது விமான நிலைய சாலை சொக்கநாதன் பட்டி அருகே அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரைத் தாண்டி எதிரே வந்த தூத்துக்குடி குடும்பத்தினரின் கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி சரவண கணேஷ் மற்றும் அவரது நண்பர் பிரதீப் ஆகிய இருவருடன், காரில் பயணித்த கல்லூரி மாணவர் ஆதித்யாவும் (19) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

https://www.facebook.com/share/r/1EiNV98F8x/

மேலும், காரில் இருந்த ஆதித்யாவின் தாய் சொர்ணலட்சுமி மற்றும் மூத்த சகோதரர் மூர்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்சில் சென்ற இருவரும் காரில் வந்த ஒருவரும் பலியானது திருமங்கலம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது‌.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top