Times of Puducherry
புதுச்சேரி காவல்துறை வெற்றிகரமாக ‘கேங் ஹன்ட்’ ஆபரேஷன் நடத்தி, ரவுடிகள் மற்றும் வரலாற்றுச் சான்று கொண்ட சட்டம்குற்றவாளிகளை சோதனை செய்தது.
புதுச்சேரி காவல்துறை இன்று அதிகாலை ‘கேங் ஹன்ட்’ ஆபரேஷன் துவங்கியது. புதுச்சேரி முழுவதும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள ரவுடிகள் மற்றும் வரலாற்றுச் சான்று கொண்ட குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 225 காவல்துறையினரும் ஈடுபட்டனர். குற்றபின்னணி உள்ளவர்களின் வீடுகளில் முறையான அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் அவர்களின் நடவடிக்கைளை கண்காணிக்கவும் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 210 குற்ற பின்னணி கொண்ட நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். 7 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் போதைப்பொருள் தடுப்புச் சட்டதின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் பத்து நபர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 116 நபர்கள் மீது பி என் எஸ் எஸ் சட்டத்தின் கீழ் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரி காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகின்றது.
எதிர்கால குற்றச்செயல்களை தடுக்க, காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்த ‘கேங் ஹன்ட்’ ஆபரேஷன் தெளிவாகத் தெரியபடுத்துகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.