Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆதரவுடன் சேதுசெல்வம் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கழக துணை பொதுச்செயலாளர் க. பொன்முடி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
மேலும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் இலட்சுமணன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன் கெளதமசிகாமணி, கடலூர் நகரச் செயலாளர் ராஜா. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கெளதமசிகாமணி ஆகியோர் தலைமையில் கழகத்தினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தொகுதி முழுவதும் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களுக்கு துரோகம் இழைத்த என்.ஆர்.காங்கிரஸ், சந்தர்ப்பவாத காங்கிரஸ் கட்சியை வெபாசிட் இழக்கச் செய்து திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவாறு பேரணி சென்றது. முன்னதாக புதுப்பேட்டையில் தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணியானது அவ்வை நகர், ராஜாஜி நகர், கனகன் தோட்டம், ஆனந்தபுரம், கொட்டுப்பாளையம், சின்னையன்பேட், வினோபா நகர், பொய்யாக்குளம், சுப்பையா நகர், மோகன் நகர், கவுண்டம்பாளையம், குண்டுபாளையம் உள்ளிட்ட 31 பூத்களிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். மேலும் பேரணி சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
இந்த பேரணியில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், கௌதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, மூர்த்தி, நந்தா சரவணன், சம்பத், திமுக மாநில, தொகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.