Times of Puducherry
நாடு முழுவதும் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 697 மாவட்டங்களில் 67,933 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக அறிவிக்கப்படுகின்றன. இத்திட்டத்தை மத்திய நலத்துறை அமைச்சர் ஜே பி நாட்டா இன்று காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
இளைஞர்களின் தலைமையிலான பங்களிப்பு மற்றும் சமூக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
JOSH குழுக்கள் வட்டாரம்/வார்டு அளவில் அமைக்கப்பட்டு, 5 எனது இளைய பாரத தன்னார்வலர்கள் மற்றும் 5 NCC மாணவர் படையினரை உள்ளடக்கியதாக இருக்கும். இக்குழுக்கள் நியமிக்கப்பட்ட Class-I அலுவலர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும்.
காசநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், பொதுமக்களிடம் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சமூக அளவில் நேரடி களப்பணிகளில் ஈடுபடுதல் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் JOSH குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கும். JOSH குழுக்களின் முதல் கட்ட தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி இன்று புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்.
தேசிய தொடக்க நிகழ்ச்சி நேரடி மற்றும் மெய்நிகர் முறையில் (Hybrid Mode) நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றன. தேசிய நிகழ்வுடன் இணைந்து, புதுச்சேரியிலும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் செயலாளர் குமார், சுகாதாரத்துறை இயக்குநர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் உமா, டாக்டர்.வெங்கடேஷ் மற்றும் சுகாதாரத் துறையின் முத்த அதிகாரகள் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெற்ற JOSH குழுக்களின் தொடக்க நிகழ்வில் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.