Times of Puducherry
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் சார்ந்த பழக்கத்தைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு பரிசோதனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடர்பான உதவிகள் வழங்கபட இருப்பதாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன், தலைவர் நவீன் பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.
இளம் தலைமுறையை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டு, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான சமூக சேவை முயற்சியாகும் என கூறிய முதுநிலை மனநல மருத்துவர் அருண் சீத்தாராமன், வசதி இல்லாதவர்களின் முழு செலவை சங்கம் ஏற்கும் என்றார். பாதிக்கப்பட்டவர்கள் “95669 89798” என்கிற தொலைபேசி எண் முன்பதிவிற்கும் சிகிச்சைக்கு வேண்டிய தகவல்களை பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொருத்தவரை மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர் அவர்களை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது இரண்டு முதல் ஆறு மாதம் வரை இவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும் . இல்லையென்றால் திருட்டு,விபத்தை ஏற்படுதல் தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபட வேண்டி இருக்கும் என எச்சரித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.