Times of Puducherry
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவர்மான G.நேரு(எ)குப்புசாமி MLA இன்று புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை திறப்பது மற்றும் பொதுமக்களுக்கு அமர்வதற்கு இருக்கைகள் அமைத்தல், பெரிய மார்க்கெட்டை புதிதாக நவீனப்படுத்துதல், உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாருதல் மற்றும் கொசு மருந்து அடித்தல், குப்பைகளை தினசரி அள்ளுதல், வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களை பிடித்தல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக உடனடியாக ஒதுக்கி, உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், புதிதாக மேம்படுத்த வேண்டிய சாலைகள் வாய்க்கால்கள் அமைத்தல், நேரு நகர் மற்றும் உருளையன்பேட்டை முல்லை நகர், கென்னடி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்தும், மேலும் உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் செயற்பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேயம் மக்கள் கழக பிரமுகர்கள்,நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.