Times of Puducherry

வேப்பூர் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 3:34 PM
ramakrishna-school-admission-on-vijayadasami-day

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் கிராமத்தில், சேலம் – கடலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் பூ. கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மழலைச் செல்வங்களின் கரங்களைத் தனது கரங்களால் பிடித்து, சிலேட்டில் ‘அ’ என எழுதி அவர்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்காலம் கல்வியிலும் வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.

வேப்பூர் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை

நிகழ்ச்சியில் பள்ளியின் இணைத் தாளாளர் அவினாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, புதிதாகச் சேர்ந்த குழந்தைகளை அன்புடன் வரவேற்று வாழ்த்தினர். விஜயதசமி நாளில் கல்விப் பயணத்தைத் தொடங்குவது சிறப்பானதாகக் கருதப்படும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் மழலைச் செல்வங்களை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top