Times of Puducherry

UG-Medical படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்க எம்பி வில்சன் கடிதம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
20 Oct 2026 • 3:19 PM
cut-off-marks-reduction-for-ug-medical-seats-wilson-letter-modi-and-nutta

இந்த கல்வி ஆண்டில் 4068 டாக்டர் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நாட்டா அவர்களுக்கும் திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதி உள்ளார் . அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2026–27 கல்வியாண்டில் 4,068 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதைத் தவிர்க்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

UG-Medical படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்க எம்பி வில்சன் கடிதம்

NEET-UG 2026 தேர்வின் வினாத்தாள் கசிந்து, அதன் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிறகு மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதைத் தவிர்க்க, நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றை நிரப்பும் வகையில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top