Times of Puducherry
டெல்டா கடலோர பகுதியை நெருங்கிய மேலடுக்கு சுழற்சி தற்போது அதிகாலை 4:30 மணி நிலவரப்படி கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ளது.
டெல்டா கடலோர பகுதி நோக்கி கீழே வந்த மேலடுக்கு சுழற்சி தற்போது அதிகாலை 4:30 மணி நிலவரப்படி கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ளது இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய மித மற்றும் சற்று கனமழையையும், ஒருசில இடங்களில் கன மற்றும் மிக கனமழையையும் மற்றும் தொடர்மழையையும் பெய்யக்கூடும் கூடும் .
வங்கக்கடலோர மாவட்டங்கள் தென்தமிழகம் சென்னை உட்பட வடதமிழகம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் வட உள்தமிழகம்மழைக்கு வாய்ப்புள்ள மற்ற பகுதிகள். இலங்கை மழை பொழிய வாய்ப்புகள் உள்ளன மேலெடுத்து சுழற்சி முறையில் தாய்லாந்து வளைகுடாவில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு வந்துவிட்டது. இது வரும் நாட்களில் தீவிரமடையும். இவ்வாறு வானிலை ஆய்வாளர் காரைக்கால் பிரபு பிரபாகர் தெரிவித்துள்ளார்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.