Times of Puducherry
நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா இன்று காலையில் கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் விஜய் வந்த வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தியதாக இவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் அவரது கணவர் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும் அவர்களையும் கைது செய்ய காவல்துறையின் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.