Times of Puducherry

நேரு MLA: நகராட்சி ஆணையர் அருண்அய்யாவு அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 2:44 PM
nehru-mla-and-arun ayyavu-jointly-inspected-rain-affected-areas

கடந்த இரண்டு மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நகரப் பகுதியான ரங்கப்பிள்ளை வீதி, வெள்ளாள முதலியார் வீதி, தம்புநாயக்கர் வீதி, லூயிபிரகாசம் வீதி மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் சரியான முறையில் வெளியேறாமல் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

மேலும் சரியான வடிகால் வசதி இல்லாமல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்க அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை சரி செய்ய உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு(எ)குப்புசாமி MLA இன்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண்அய்யாவு அவர்களுடன் இணைந்து மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

சின்ன சுப்பிராய பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதியில் உள்ள இருபுற – U – வடிவ வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தினால் இதற்கான தீர்வு காணப்படும் என முடிவெடுத்து, சின்னசுப்புராய பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதி இருபுற வாய்க்காலை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

மேலும் ஆய்வின் போது புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும், நேயம் மக்கள் கழக பிரமுகர்களும் பலர் உடன் இருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top